திவ்யதேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் மற்ற 2 தலங்கள் வானுலகிலும் உள்ளன.
108 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.
108 திவ்யதேசங்களின் பெருமாள் போற்றி
- ஓம் ஸ்ரீ அரங்கநாதப் பெருமாளே போற்றி
- ஓம் அழகிய மடவாளம் பெருமாளே போற்றி
- ஓம் புருஷோத்தமன் பெருமாளே போற்றி
- ஓம் புண்டரீகாஷப்பெருமாளே போற்றி
- ஓம் சுந்தர் ராஜ பெருமாளே போற்றி
- ஓம் அப்பக்குடத்தான் பெருமாளே போற்றி
- ஓம் ஹரசாபவிமோசன பெருமாளே போற்றி
- ஓம் ஜெகத்ரட்சகன் பெருமாளே போற்றி
- ஓம் கஜேந்திரன் பெருமாளே போற்றி
- ஓம் ராமர் பெருமாளே போற்றி
- ஓம் ஆண்டளக்கும்பெருமாளே போற்றி
- ஓம் ஆராவமுதபெருமாளே போற்றி
- ஓம் ஒப்பிலியப்பன் பெருமாளே போற்றி
- ஓம் ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
- ஓம் சாரநாதன் பெருமாளே போற்றி
- ஓம் ஜெகநாதன் பெருமாளே போற்றி
- ஓம் கோலவில்லி பெருமாளே போற்றி
- ஓம் பக்தவத்சலம் பெருமாளே போற்றி
- ஓம் சௌரிராஐ பெருமாளே போற்றி
- ஓம் லோகநாதன் பெருமாளே போற்றி
- ஓம் சுந்தர் ராஜ பெருமாளே போற்றி
- ஓம் நீலமேகம் பெருமாளே போற்றி
- ஓம் மணிப்பர்வதபெருமாளே போற்றி
- ஓம் நரசிம்மன் பெருமாளே போற்றி
- ஓம் ஸ்ரீகிருபசமுத்ரபெருமாளே போற்றி
- ஓம் பரிமளம் ரெங்கநாதன் பெருமாளே போற்றி
- ஓம் திருவிக்ரமப்பெருமாளே போற்றி
- ஓம் கோபாலகிருஷ்னபெருமாளே போற்றி
- ஓம் குடமாடு கூத்தன்பெருமாளே போற்றி
- ஓம் புருஷோத்தமபெருமாளே போற்றி
- ஓம் ஹேமரெஙாகநாதப்பெருமாளே போற்றி
- ஓம் சாஸ்வத தீபாயநாராயணபெருமாளே போற்றி
- ஓம் வைகுந்த நாத பெருமாளே போற்றி
- ஓம் லெக்ஷமி ரெங்கநாதன் பெருமாளே போற்றி
- ஓம் வரதராஜன். பெருமாளே போற்றி
- ஓம் தாமரையாள் கேள்வன்பெருமாளே போற்றி
- ஓம் கேதாரப்பதிவராயபெருமாளே போற்றி
- ஓம் தேவநாயகப் பெருமாளே போற்றி
- ஓம் ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
- ஓம் கோவிந்தராஜ் பெருமாளே போற்றி
- ஓம் தேவநாத பெருமாளே போற்றி
- ஓம் திருவிக்ரம பெருமாளே போற்றி
- ஓம் தேவராஜ பெருமாளே போற்றி
- ஓம் அஸ்தபுஜ பெருமாளே போற்றி
- ஓம் தீபப்பிரகாசப் பெருமாளே போற்றி
- ஓம் யோகநரசிம்ம பெருமாளே போற்றி
- ஓம் ஜெகதீசன் பெருமாளே போற்றி
- ஓம் பாணடவதூதபெருமாளே போற்றி
- ஓம் சந்திரசூட பெருமாளே போற்றி
- ஓம் திருவிக்ரம பெருமாளே போற்றி
- ஓம் யதோதகாரிப் பெருமாளே போற்றி
- ஓம் கருணாகரப் பெருமாளே போற்றி
- ஓம் நீலமேகம் பெருமாளே போற்றி
- ஓம் ஆதிவராகப் பெருமாளே போற்றி
- ஓம் பவளவண்ணப்பெருமாளே போற்றி
- ஓம் வைகுந்தநாதப்பெருமாளே போற்றி
- ஓம் விஜயராகவப் பெருமாளே போற்றி
- ஓம் பக்தவத்சலப் பெருமாளே போற்றி
- ஓம் வைத்யவீரராகவப்பெருமாளே போற்றி
- ஓம் வெங்கடகிருஷ்ணப்பெருமாளே போற்றி
- ஓம் நீர்வண்ணப்பெருமாளே போற்றி
- ஓம் நித்யகல்யாணப்பெருமாளே போற்றி
- ஓம் ஸ்தலசயனப்பெருமாளே போற்றி
- ஓம் யோகநரசிம்மப்பெருமாளே போற்றி
- ஓம் ராமசந்திரப்பெருமாளே போற்றி
- ஓம் தேவராஜப் பெருமாளே போற்றி
- ஓம் பரமபுருஷப் பெருமாளே போற்றி
- ஓம் புருஷோத்தமப்பெருமாளே போற்றி
- ஓம் பத்ரிநாதப்பெருமாளே போற்றி
- ஓம் மூர்த்திப்பெருமாளே போற்றி
- ஓம் கோவர்த்தன கிரிதாரிப் பெருமாளே போற்றி
- ஓம் நவமோகன கிருஷ்ண பெருமாளே போற்றி
- ஓம் துவாரகாதீட்ஷபெருமாள் போற்றி
- ஓம் பிரகலாத வரத பெருமாளே போற்றி
- ஓம் ஸ்ரீநிவாச பெருமாளே போற்றி
- ஓம் நவமுகுந்த பெருமாளே போற்றி
- ஓம் அபயபிரதாய பெருமாளே போற்றி
- ஓம் கத்துரஸ்வாமி பெருமாளே போற்றி
- ஓம் சுவாமிநாத பெருமாளே போற்றி
- ஓம் சுந்தர் பெருமாளே போற்றி
- ஓம் அம்ருதா நாராயணசாமி பெருமாளே போற்றி
- ஓம் தேவாதிதேவ பெருமாளே போற்றி
- ஓம் மாயப்பிரான் பெருமாளே போற்றி
- ஓம் குறளப்பன் பெருமாளே போற்றி
- ஓம் பாம்பனையப்பன் பெருமாளே போற்றி
- ஓம் அனந்த பத்மநாபப் பெருமாளே போற்றி
- ஓம் ஆதிகேசவப் பெருமாளே போற்றி
- ஓம் திருவாழ்மார்பன் பெருமாளே போற்றி
- ஓம் வாமனசேத்ரபூர்ணாய பெருமாளே போற்றி
- ஓம் தூதரின்நாதப் பெருமாளே போற்றி
- ஓம் வைகுந்தநாதப் பெருமாளே போற்றி
- ஓம் விஜயசனப் பெருமாளே போற்றி
- ஓம் காய் சின வேந்தன் பெருமாளே போற்றி
- ஓம் அரவிந்த லோக்சன பெருமாளே போற்றி
- ஓம் ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
- ஓம் வைத்த மானித பெருமாளே போற்றி
- ஓம் மகர நெடுங்குழி காத்தான் பெருமாளே போற்றி
- ஓம் ஆதிநாதப் பெருமாளே போற்றி
- ஓம் வடபத்ரசாயிப் பெருமாளே போற்றி
- ஓம் நாராயணப் பெருமாளே போற்றி
- ஓம் கூடல் அழகர் பெருமாளே போற்றி
- ஓம் கள்ளழகர் பெருமாளே போற்றி
- ஓம் காளமேக பெருமாளே போற்றி
- ஓம் சவுமியப் நாராயணப் பெருமாளே போற்றி
- ஓம் கல்யாண ஜெகநாதன் பெருமாளே போற்றி
- ஓம் சத்யகிரி நாதப் பெருமாளே போற்றி
- ஓம் பாற்கடற் ந்த பெருமாளே போற்றி
- ஓம் பரமநாத பெருமாளே போற்றி
ஓம் நமோ நாராயணசாமி நம ஓம் நமோ நாராயணசாமி நம ஓம் நமோ நாராயணசாமி நம
இதையும் படிக்கலாம் : வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள்..!