ஜோதிடத்தின் மிக அடிப்படையான கொள்கை 12 ராசிகளையும் அவற்றின் தன்மைகளையுமே மையமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ராசியும் தனியே சிறப்பூட்டும் பலங்களையும் அவ்வாறே பொதுவான பலவீனங்களையும் கொண்டுள்ளன.
நெருப்பு ராசிகள்
- மேஷம்
- சிம்மம்
- தனுசு
இந்த ராசிக்காரர்கள் கோபம், முரட்டுத்தனம், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.
நில ராசிகள்
- ரிஷபம்
- கன்னி
- மகரம்
இந்த ராசிக்காரர்கள் அன்பு நிறைந்த மனத்துடன், சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், ஒழுக்கத்துடன், பாசத்துடன் நல்வழியில் செல்பவர்களாக இருப்பார்கள்.
காற்று ராசிகள்
- மிதுனம்
- துலாம்
- கும்பம்
இந்த ராசிக்காரர்களுடைய மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தற்பெருமையுடன் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.
நீர் ராசி
- கடகம்
- விருச்சிகம்
- மீனம்
இந்த ராசிக்காரர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எப்பொழுதும் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
2 | ரிஷபம் | நிலவாகை |
3 | மிதுனம் | நத்தைச்சூரி |
4 | கடகம் | விஷ்ணுகிரந்தி |
5 | சிம்மம் | கருடன் கிழங்கு |
6 | கன்னி | அவுரி |
7 | துலாம் | நெருஞ்சில் |
8 | விருச்சிகம் | சிவனார் வேம்பு |
9 | தனுசு | கோபுரந்தாங்கி |
10 | மகரம் | கோழிஞ்சி |
11 | கும்பம் | நாயுருவி |
12 | மீனம் | கீழா நெல்லி |