ஆடி மாதம் பிறப்பு 2024 எப்போது?

தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது. இந்த வகையில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முழுவதும் சிறப்பு நாட்களைக் கொண்டது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் கிழமைகள் கொண்டாடப்பட வேண்டிய நாள்.

இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17ம் தேதி பிறந்தது. 17ம் தேதி புதன் கிழமை வருவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதம் பிறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கோவிலில் களைகட்ட துவங்கி விட்டது.

ஆடி மாதம் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம். மிகப்பெரிய அம்மன் கோவில் மட்டுமின்றி, அனைத்து ஊர்களிலும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆடி கொண்டாட்டம்

adi 2024

ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என பல விசேஷங்கள் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோயிலுக்குச் சென்றால், கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற பல சிறப்பு நிகழ்ச்சிகள் கோயிலில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆடி மாத கொண்டாட்டங்கள் தென்மாவட்டங்களை விட வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

aadi
ஆடி கூழ்

குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில், ஆடித் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், ஆடியின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பக்தர்கள் கூழ் ஊற்றி, அன்னதானம் வழங்குவது வழக்கம்.

ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இதையும் படிக்கலாம் : ஆடி மாதத்தின் சிறப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *