திருமணம் கைகூட ஆடி வெள்ளி..!

பொதுவாக, வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட சிறந்த நாள்.

ஆடி மாதத்தில் பார்வதிதேவி சிவபெருமானை விட சக்தி வாய்ந்தவள் என்பது நம்பிக்கை.

தஷ்ணாயனத்தின் சிறப்பு காரணமாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கணவனின் ஆயுள் நீடிக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும் சுமங்கலிப் பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

சுமங்கலிப் பெண்கள் இந்நாளில் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும், மாங்கல்ய பலம் கூடும்.

பெண்கள் துளசி பூஜை செய்தால் நினைத்தது நடக்கும். வீட்டில் அனைத்து செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

aadi velli
ஆடி வெள்ளி

ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து, 10 வயதுக்குட்பட்ட சிறுமிககளை அம்மனாகக் கருதி உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், கொடுத்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.

அம்மனை வணங்கும் போது “லலிதாசகஸ்ர நாமம்” ஓத வேண்டும் அல்லது ஜபிக்க வேண்டும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் பெண்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகள் கிடைக்கும்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, அருகம்புல்லால் விநாயகரை பூஜிக்க வேண்டும். கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட செல்வம் உண்டாகும். தடைகள் நீங்கும்.

ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை தவறாமல் செய்து வந்தால், நீண்ட நாட்களாக இருந்த பல பிரச்சனைகள் தீரும்.

சொல்ல முடியாத அவமானங்களும் கஷ்டங்களும் கூட மறைந்துவிடும்.

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, முடித்துவிட்டு தீபம் ஏற்றி, வாசனை மலர்களை வைத்து, “ஓம் சர்வ சக்தி தாயே போதி” என்ற மந்திரத்தை 108 முறை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன் மந்திரத்தை ஜெபிக்கவும். தீராத துன்பம் என்று உங்களுக்கு எது இருக்கின்றதோ அந்த பிரச்சினை தீரும் என்று முதலில் மனதார வேண்டிக் கொண்டு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

அதுபோல் ஆடி மாதத்தில் வாசலில் வேப்ப இலையை சொருகி வைக்க கண்ணுக்கு தெரியாத காற்றில் உள்ள கிருமிகள் நம் வீடுகளுக்குள் வராது.

இதையும் படிக்கலாம் : ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை பாடல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *