அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. சிவன் இவளது சக்தியால் தான் சம்ஹாரமே செய்கிறார். ஈஸ்வரனின் சக்தி இவள்.
முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.
காயத்ரி மந்திரம்
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.
மகாலட்சுமியின் அருளை குறைவின்றி பெற மந்திரம்..!
தியான சுலோகம்
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.
மந்திரம்
ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
இதையும் படிக்கலாம் : கௌமாரி – சப்த கன்னியர்