கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர் தான் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்.
காயத்ரி மந்திரம்
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
தியான சுலோகம்
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!
மந்திரம்
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:
இதையும் படிக்கலாம் : வைஷ்ணவி – சப்த கன்னியர்