புனித குளியல், தானம், தர்ப்பணம்.
சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி அமாவாசை, 12 மாத அமாவாசைகளில் சிறந்ததாக கருதப்படுகிறது.
கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் நல்லது.
பொதுவாக, ஆடி அமாவாசையில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை.
1. புனித குளியல்
2. தானம்
3. தர்ப்பணம்
இந்த மூன்று விஷயங்களையும் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பல இடங்களில் புண்ணிய நதிகளும், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
நம் முன்னோர்கள் தங்கள் சந்ததிகள் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ பல இடங்களில் சிறப்பான தீர்த்தங்களை கண்டுபிடித்து வழங்கியுள்ளனர்.
இந்த தீர்த்தங்களின் பெருமையை உணர்ந்து, இந்த தீர்த்தங்கள் இருக்கும் இடத்தில் புனித நீராடலாம் என்று கோயில்களைக் கட்டினார்கள். பல நூற்றாண்டுகளாக, ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் தீர்த்தத்தின் புனிதத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தீர்த்தங்கள் வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்தது. நமது நாகரிகத்தின் முழுப் பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.
இந்த தீர்த்தங்கள் பஞ்ச பூதங்களில் ஒன்று மேலும் அமாவாசை அன்று இரட்டிப்பு சக்தி பெற்று இருக்கும்.
எனவே, புண்ணிய நதி மற்றும் புண்ணிய தீர்த்ததில் நீராடி, இறைவனை வழிபட்டால், பெரும் பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
இந்த தீர்த்தக்கரங்களில் பித்ருதர்ப்பணம் செய்வது அதிக புண்ணியத்தை தரும்.
இதையும் படிக்கலாம் : ஆடி மாதத்தின் சிறப்புகள்