ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு தமிழகத்தில் மிகவும் பிரபலம்.
அம்மன் வீற்றிருக்கும் இடத்தில் பல்வேறு வகையான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி…பராசக்தி” என்ற கோஷங்கள் ஆத்மார்த்தமான அருள் அலைகளாக பரவுகின்றன.
சக்தி வழிபாடு மிக மிக பழமையானது. பழங்காலத்தில் இவ்வகை வழிபாடு “தாய்மை வழிபாடு” என்று அழைக்கப்பட்டது. உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது.
அன்னை சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பாத்திரங்களைத் தன் அவதாரங்களாகப் படைத்து, பின்னர் “ஹ்ரீம்” என்ற பீஜத்தில் தோன்றியதாக திருமூலர் கூறுகிறார்.
‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தைப் போலவே ‘ஹ்ரீம்’ மந்திரமும் சிறப்பு வாய்ந்தது.
“ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் நிறுத்தி, எண்ணங்களை அலைய விடாமல், மனதை ஒரு முகப்படுத்தி உச்சரித்தால், முக்காலத்தையும் உணர்ந்து, மரணத்தை வென்று, அற்புதமான வாழ்வு பெறலாம் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம் : ஆடி மாதத்தின் சிறப்புகள்