மாய வாடை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 88 

மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்
வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் – பழையோர்மேல்

வால நேசநி னைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக – ளெவரேனும்

நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
காசி லாதவர் தங்களை யன்பற
நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக – ளவர்தாய்மார்

நீலி நாடக மும்பயில் மண்டைகள்
பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
நீச ரோடுமி ணங்குக டம்பிக – ளுறவாமோ

பாயு மாமத தந்திமு கம்பெறு
மாதி பாரத மென்றபெ ருங்கதை
பார மேருவி லன்றுவ ரைந்தவ – னிளையோனே

பாவை யாள்குற மங்கைசெ ழுந்தன
பார மீதில ணைந்துமு யங்கிய
பாக மாகிய சந்தன குங்கும – மணிமார்பா

சீய மாயுரு வங்கொடு வந்தசு
ரேசன் மார்பையி டந்துப சுங்குடர்
சேர வாரிய ணிந்தநெ டும்புயன் – மருகோனே

தேனு லாவுக டம்பம ணிந்தகி
ரீட சேகர சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்திலு கந்தருள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : மான்போல் கண் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 89 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *