கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருக்க வேண்டும். விரத நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
பிறகு முருகன் படத்துக்கு மாலையை அணிவித்து, “துதிப்போருக்கு வல்வினை போம்” என்று தொடங்கும் கந்த ஷஷ்டி கவசம் ஓதவும்.
ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று உண்ணாவிரத முறை கூறினாலும், அது உண்மையில் சாத்தியமற்றது, எனவே நீங்கள் காலையில் மட்டுமே விரதம் இருக்க முடியும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்சாதம் சாப்பிடலாம், இரவில் பழங்கள் அல்லது எளிய உணவை சாப்பிடலாம்.
உங்கள் மதிய உணவில் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். ஊறுகாய் மற்றும் வெங்காயத்தைத் தவிர்க்கவும். ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல், முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் உச்சரிக்க வேண்டும். அலுவலக பணியாளர்கள் டீ, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சஷ்டி விரதத்திற்கு கட்டுப்பாடுதான் முக்கியம். உணவு கட்டுப்பாடு தான். உணவுக் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால், மனக் கட்டுப்பாடு தானாகவே வரும். மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது.
குழந்தை பேறு இல்லாத பெண்கள் முருகன் கோவிலில் தங்கி, விரதம் இருந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாம் : கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு