பறவைகள் குளத்தை விட்டு வேறு இடங்களை தேடி சென்றாலும் குளத்தில் மீதம் இருப்பது அல்லி மற்றும் தாமரை மலர்கள் மட்டுமே.
இருபது வருஷம் ஆனாலும், காய்ந்து எரிந்தாலும் அங்கேயே கிடக்கும்.
மீண்டும் தண்ணீர் வரும் போது, அந்த காய்ந்து வாடிய கொடிகள் மீண்டும் எழுந்து நின்று, பிரகாசித்து, பூக்கும்.
நீரின் உயரத்திற்கு ஏற்ப தாமரை மலர்கள் தண்ணீரில் மிதக்கும். கல்வியும் அப்படித்தான். அது என்றென்றும் நம்முடன் இருக்கும். அதனால் தான் கல்வியின் அதிபதியான சரஸ்வதி தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள்.
Contents
சரஸ்வதி துதி மந்திரம்
ஞாபகசக்தி அதிகமாக சரஸ்வதி துதி மந்திரத்தைப் படிக்க வேண்டும்.
ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி!
சகலகலாவல்லி சாரபிம்பாதரி!
சாரதாதேவி சாஸ்திரவல்லி!
வீணா புஸ்தகராணி வாணி!
கமலபாணி வாக்தேவி வரநாயகி!
புஸ்தகஹஸ்தே நமோஸ்துதே!
இதையும் படிக்கலாம் : சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள்..!