சிவராத்திரி அன்று மட்டும் பூக்கும் அதிசய மலர்..!

குங்கிலிய மலர் சிவபெருமானுக்கு உகந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிவராத்திரி அன்று மட்டும் பூக்கும்.

குங்கிலியா மரம் மூலிகை குணம் கொண்டது. இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி என இரண்டு வகைகள் உள்ளன.

Kungliya flower
குங்கிலிய மலர்

ஜலரி மரத்தில் சிவராத்திரி அன்று மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் அவற்றை கூட வெட்டுவதில்லை. கன்னடத்தில் குங்கிலிய மரத்தை “தளி” என அழைப்பர்.

ஹோசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் இந்த பெயரில் ஒரு இடம் உள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியின் போது அருகில் உள்ள தேவர் பெட்டா மலைப்பகுதியில் குங்கிலியப் பூக்கள் நிரம்பி வழியும். இந்த மலர் ஒரு அரிய மணம் கொண்டது.

இந்த மரங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

சிவராத்திரியில் பூக்கும் அதிசய மலர்களைக் காணவும், அவற்றின் நறுமணத்தை சுவாசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் தேவர் பெட்டா மலைகளுக்குச் செல்கின்றனர்.

இதையும் படிக்கலாம் : சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *