அபகார நிந்தைபட் – டுழலாதே
அறியாத வஞ்சரைக் – குறியாதே
உபதேச மந்திரப் – பொருளாலே
உனைநானி னைந்தருட் – பெறுவேனோ
இபமாமு கன்தனக் – கிளையோனே
இமவான்ம டந்தையுத் – தமிபாலா
ஜெபமாலை தந்தசற் – குருநாதா
திருவாவி னன்குடிப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : அரிசன வாடை (பழனி) – திருப்புகழ் 108