அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு – முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு – வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது – நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது – தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக – வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக – ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு – தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : அவனிதனிலே (பழனி) – திருப்புகழ் 110