ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால், அது ஏதோ ஆகாத மாதம் என்பது போல பலர் நடந்துக்குறாங்க. ஆனால், ஆடி மாதத்தில் பிறந்த பலர் கோடீஸ்வரர்களாகவும், குவலயம் போற்றுவோராகவும் வாழ்கின்றனர். எல்லாவற்றிற்கும் காரணம் நவ கிரகம் தான்.
ஆடி ஆகாத மாதம் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை ஆட்டி படைக்கும். இந்த குடும்பம் பல கஷ்டங்களை சந்திக்கும் என்று நம்புகின்றனர்.
ஆடி மாதத்தில் கடக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். வாழ்க்கை மற்ற கிரக அமைப்புகளையும் சார்ந்துள்ளது. கிரகங்களின் சுழற்சிகள் மனித வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதால், ஆடி மாதம் என்பதெல்லாம் ஒரு கணக்கே கிடையாது.
ஆடியில் ஆண் குழந்தை பிறந்தால்
ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் பெற்றோர்களை ஆட்டிவைக்கும் என்று சொல்லும் பழக்கம் இருக்கிறது. செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்க பெற்றோருக்கு ஆடி மாதத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன்பிறகு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், பெற்ற குழந்தைகளைக் குறை கூறுவார்கள். ஆனால் தொழில் தோல்வி என்பது உண்மையில் சுய ஜாதகத்தின் தெசாபுத்திப் பலனால் ஏற்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஆடி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்
ஆடி மாதத்தில் பிறந்த குழந்தைகள் மிகவும் சுட்டித்தனம் செய்யும் குறும்புக்கார குழந்தையாக இருக்கும். சிறு வயதிலேயே இந்த சுட்டித்தனத்தால் பல விதமான சேட்டைகள் செய்து, அதனால் பிரச்சனைகளில் சிக்கி கொள்ளவும் செய்வார்கள். எதையும் ஒரு முறை பார்த்திருந்தால் அதை மனதில் பதித்து வைத்துக் கொள்வார்கள். மூளையின் சக்தியே அவர்களின் வலிமைக்கு ஆதாரம்.
ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் ஒரு தனி குணம் உண்டு. எந்த ஒரு பிரச்சனையையும் தாங்கிக்கொண்டு அதிலிருந்து விடுபடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. பிரச்சனையில் சிக்கினாலும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பது அவர்களுக்குத் தெரியும்.
அவசரக்காரர்களைப் போல் தோன்றினாலும் யோசித்து முடிவெடுப்பார். ஆடியில் பிறந்தவர்களுக்கு எதிர்ப்புகளைத் தாங்கும் திறனும் உண்டு. இருப்பினும், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, குறிப்பாக வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, தொழில் முதலீடுகள் செய்யும் போது, பெரியவர்கள், அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையில் தவறுகள் செய்யாமல் வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம்.
அவர்கள் குடும்பம் மற்றும் உறவுகளை மிகவும் நேசித்தாலும், அவர்கள் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். அதிக கற்பனை திறன் கொண்டவர். அவர்கள் அபார நினைவாற்றல் கொண்டவர். யாரையாவது அவர்களுக்கு பிடித்தால், உடனடியாக அவர்களுடன் நட்பு கொள்வார்கள்.
நட்பு வட்டாரத்தில் இவர்கள் மென்மையாக இருப்பதும், பேசும் போது நன்கு யோசித்து பேசுவதும் சிறந்தது. பேச்சாற்றலில் அவர்களை யாராலும் வெல்ல முடியாது. பார்ப்பதற்கு சாது போல் இருந்தாலும், பிரச்சனையில் சிக்கினால் நழுவி விடுகிறார்கள். எப்பொழுதும் எதையாவது நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
இம்மாதத்தில் பிறந்தவர்கள் உஷ்ணத்தை தாங்கும் உடல்வாகு உடையவர்கள். அம்மை நோய் தாக்குதலுக்கு ஆளாகலாம். உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. உங்கள் மனதை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அதிக ஆற்றலைச் செலவிடுகிறீர்கள், அதனால் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மட்டும் அலட்சியம் காட்டுவீர்கள். நம் முன்னோர்கள் கூறிய “நோயற்ற வாழ்வு வாழ்வே செல்வம்” கடைபிடித்தால் எண்ணற்ற நன்மைகளைத் தரும்.
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் ஏன் சேரக்கூடாது?
தமிழகத்தில் ஆடி மாதம் திருமண செய்யும் வழக்கம் இல்லை. திருமணமான புதுமண தாம்பதியினரை ஆடி மாதம் பிரித்து வைக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ஆடி மாதத்தில் கரு உருவானால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் வெயில் அதிகம் இருக்கும் காரணத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கரு உற்பத்தி ஆகி 4வது மாதத்தில் தான் குழந்தையின் எலும்பு வளர்ச்சி வலுவடையும். ஆடி மாதம் கரு உருவானால் 4ஆம் மாதமான ஐப்பசி மாதம் மழைக்கலாம் என்பதால் சூரியனிடம் இருந்து கிடைக்கும் வைட்டமின்களில் பற்றாக்குறை ஏற்பட்டு, குழந்தையின் எலும்பு வளர்ச்சியில் அதிக பாதிப்பு ஏற்படும்.
இதையும் படிக்கலாம் :ஆடி மாதம் திருமணத்தை தவிர்க்க காரணம் இதுவே..!