எந்த தானங்கள் செய்தால் என்ன பலன் தெரியுமா?

நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் தொண்டு பல நன்மைகளைத் தரும். ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் பலன் இல்லை. நம் உளமார எந்த தானத்தை செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

  • அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
  • மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
  • வஸ்திர தானம் – ஆயுளை விருத்தி செய்யும்.
  • அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
  • பழங்கள் தானம் – நம் புத்தி தெளிவடையும்.
  • தீப தானம் – கண்பார்வை சிறப்பாக இருக்கும்.
  • கோ தானம் – பித்ரு சாபம் நிவர்த்தி அடையும்.
  • எள் தானம் – பாப விமோசனம் அடையலாம்.
  • வெல்லம் தானம் – குலம் அபிவிருத்தி அடையும்.
  • தேங்காய் தானம் – நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
  • நெய் தானம் – உடல் பிணிகள் நீங்கும்.
  • தேன் தானம் – குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • தங்கம் தானம் – குடும்ப தோஷம் நீங்கும்.
  • வெள்ளி தானம் – பித்ருகள் ஆசி கிடைக்கும்.
  • தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
  • கம்பளி தானம் – துர்சொப்பனம், துர்சகுன பயம் நிவர்த்தி அடையும்.
  • பால் தானம் – துக்கம் நீங்கும்.
  • சந்தனக்கட்டை தானம் – புகழ் கிடைக்கும்.
  • பூமி தானம் – இகபர சுகங்கள்.
  • நெல்லிக்கனி தானம் – ஞானம் உண்டாகும்.
  • தயிர் தானம் – இந்திரிய விருத்தி ஏற்படும்.

இதையும் படிக்கலாம் : கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *