கருகி அகன்று (பழனி) – திருப்புகழ் 132 

கருகிய கன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று – துதிபேசிக்

கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு – பலநாளும்

விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று – தளராதே

விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று – பெறுவேனோ

முருகக டம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் – முறைபேச

முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற – வடிவேலா

பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி – மயில்வீரா

பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கருப்புவிலில் (பழனி) – திருப்புகழ் 133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *