
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
கொலைகள் செயவெ – களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி – னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய – மயில்போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் – உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் – அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி – யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ – முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : குறித்தமணி (பழனி) – திருப்புகழ் 149