
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி – பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி – எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு – னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் – புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி – புனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய – முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை – யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : சுருதி முடி மோனம் (பழநி) – திருப்புகழ் 160