
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 27வது தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. முன்னர் தாம்பரம் தொகுதியில் இருந்த பகுதிகளைப் பிரித்து சோளிங்கநல்லூர் தொகுதி உருவானது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | கே. பி. கந்தன் | அதிமுக | 1,45,385 |
2016 | எஸ். அரவிந்த் ரமேஷ் | திமுக | 1,47,014 |
2021 | எஸ். அரவிந்த் ரமேஷ் | திமுக | 1,71,558 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | – | – | – | – |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தாம்பரம் வட்டம் (பகுதி)
நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள்.
புழுதிவாக்கம் (உள்ளகரம்) (நகராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம் துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி).