கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 45வது தொகுதியாக கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதி உள்ளது. இது 2011 முதல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | சே. கு. தமிழரசன் | இந்தியக் குடியரசுக் கட்சி | 72,002 |
2016 | கோ. லோகநாதன் | அதிமுக | 75,612 |
2021 | பூவை எம். ஜெகனமூர்த்தி | புரட்சி பாரதம் கட்சி (அதிமுக கூட்டணி) | 83,989 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,10,658 | 1,15,595 | 8 | 2,26,261 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
குடியாத்தம் வட்டம் (பகுதி) தணகொண்டப்பள்ளி, விலுதோனபாளையம், தட்சிணபதபாளையம், ரெங்கசமுத்திரம், பரதராமி, புட்டவாரிபள்ளி, செங்குன்றம், கோடிகுப்பம், தட்டப்பாறை, சின்னாளபள்ளி, முக்குன்றம், பாக்கம், ராமாலை, தத்திமாணபள்ளி, கல்லபாடி, கொண்டசமுத்திரம், பிச்சனூர், ராஜகுப்பம், நெல்லூர்பேட்டை, செருவங்கி, தாழையாத்தம், செதுக்கரை, மேலாலத்தூர், மேல்முட்டுக்கூர், செட்டிக்குப்பம், போஜனபுரம், செம்பேடு, சிங்கல்படி, கூடநகரம், அனங்காநல்லூர், கொத்தகுப்பம், பட்டு, ஒலகாசி மற்றும் சித்தாத்தூர் கிராமங்கள்.
காட்பாடி வட்டம் (பகுதி), தொண்டாந்துளசி, செஞ்சி, பனமடங்கி, மாளியப்பட்டு, மேல்மாங்குப்பம், மேல்மாயில், கீழ்முட்டுக்கூர், காளாம்பட்டு, அரும்பாக்கம், லத்தேரி, விளுந்தக்கல், ஜாபராபேட்டை, வஞ்சூர், ஒழையாத்தூர், அனங்குடி, பொம்மிநாயக்கன்பாளையம், அங்காரன்குப்பம், அலங்கனேரி, முருக்கம்பட்டு, காங்குப்பம், தேவரிஷிகுப்பம், நாகல், கீழ் ஆலத்தூர், சேத்துவண்டை, அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, பசுமாத்தூர், சென்னாங்குப்பம், மாச்சனூர், பழையகிருஷ்ணாபுரம், காவனூர், கீழ்வைத்தியணான்குப்பம், வேப்பங்கணேரி, துத்திதாங்கல், மேல்விலாச்சூர், பில்லாந்திபட்டு, மேலூர், கீழுர், முதினாம்பட்டு, கீழ்விலாச்சூர், வடுகன் தாங்கல், விக்ரமாச்சி, வேலம்பட்டு, வாழ்வான்குன்றும், வடவிரிஞ்சிபுரம், கொத்தமங்கலம், சோழமூர் மற்றும் திருமணி கிராமங்கள்.