குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 46வது தொகுதியாக குடியாத்தம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | இரத்தினசாமி மற்றும்
ஏ. ஜே. அருணாச்சல முதலியார் |
இந்திய தேசிய காங்கிரஸ் | 24,101 |
1954 | காமராசர் | இந்திய தேசிய காங்கிரஸ் | – |
1957 | வி. கே. கோதண்டராமன் மற்றும்
டி. மணவாளன் |
இந்திய பொதுவுடமைக் கட்சி மற்றும் காங்கிரசு | 33,811 |
1962 | டி. மணவாளன் | இந்திய தேசிய காங்கிரஸ் | 25,795 |
1967 | வி. கே. கோதண்டராமன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 38,825 |
1971 | எப். கே. துரைசாமி | திமுக | 34,954 |
1977 | வி. கே. கோதண்டராமன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 20,590 |
1980 | கே. ஆர். சுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 30,869 |
1984 | ஆர். கோவிந்தசாமி | இந்திய தேசிய காங்கிரஸ் | 32,077 |
1989 | கே. ஆர். சுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 22,037 |
1991 | வி. தண்டாயுதபாணி | இந்திய தேசிய காங்கிரஸ் | 63,796 |
1996 | வி. ஜி. தனபால் | திமுக | 48,837 |
2001 | சி. எம். சூரியகலா | அதிமுக | 61,128 |
2006 | ஜி. லதா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 48,166 |
2011 | கே. லிங்கமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 79,416 |
2016 | சி. ஜெயந்தி பத்மநாபன் | அதிமுக | 94,689 |
2019 | ( இடைத்தேர்தல் ) எஸ். காத்தவராயன் |
திமுக | 1,06,137 |
2021 | வி. அமுலு | திமுக | 1,00,412 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,39,386 | 1,49,135 | 43 | 2,88,564 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- குடியாத்தம் வட்டம் (பகுதி)
அரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் ,பரதராமி மற்றும் உள்ளி கிராமங்கள்.
குடியாத்தம் (நகராட்சி) மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்)
- பேரணாம்பட்டு வட்டம் (பகுதி)
பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், இராமச்சந்திராபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்.
துத்திப்பட்டு (சென்சஸ் டவுன்) மற்றும் பேர்ணாம்பட்டு (பேரூராட்சி).