வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 47வது தொகுதியாக வாணியம்பாடி தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு | கட்சி | வெற்றி பெற்றவர் |
1952 | சுயேச்சை | A. K.ஹனுமந்தராயகவுண்டர் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | ஏ. ஏ. ரசீது |
1962 | திமுக | M. P. வடிவேல் |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | ராஜமன்னார் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1971 | எம். அப்துல் லத்தீப் | சுயேட்சை (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்) | – |
1977 | எம். அப்துல் லத்தீப் | சுயேட்சை (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்) | 26,620 |
1980 | என். குலசேகர பாண்டியன் | அதிமுக | 38,049 |
1984 | எச். அப்துல் மஜீத் | இந்திய தேசிய காங்கிரசு | 39,141 |
1989 | பி. அப்துல் சமது | திமுக (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் லத்தீப் அணி) | 39,723 |
1991 | இ. சம்பத் | இந்திய தேசிய காங்கிரசு | 53,354 |
1996 | அப்துல் லத்தீப் | திமுக (இந்திய தேசிய லீக்) | 74,223 |
2001 | அப்துல் லத்தீப் | சுயேட்சை (இந்திய தேசிய லீக்) | 54,218 |
2006 | அப்துல் பாசித் | திமுக (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்) | 69,837 |
2011 | கோவி. சம்பத் குமார் | அதிமுக | 80,563 |
2016 | மரு. நிலோபர் கபில் | அதிமுக | 69,588 |
2021 | கோ. செந்தில் குமார் | அதிமுக | 88,018 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,23,983 | 1,28,386 | 45 | 2,52,414 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வாணியம்பாடி வட்டம் (பகுதி)
தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள்.
உதயேந்திரம் (பேரூராட்சி), ஜாபராபாத் (சென்சஸ் டவுன்), வாணியம்பாடி (நகராட்சி) மற்றும் வார்ப்புரு:ஆலங்காயம் (பேரூராட்சி). வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.