ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 49வது தொகுதியாக ஜோலார்பேட்டை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | கே. சி. வீரமணி | அதிமுக | 86,273 |
2016 | கே. சி. வீரமணி | அதிமுக | 82,526 |
2021 | க. தேவராசு | திமுக | 89,490 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,20,567 | 1,23,235 | 13 | 2,43,815 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வாணியம்பாடி வட்டம் (பகுதி)
கலந்திரா, சின்னவேப்பம்பட்டு, பெத்தகல்லுபள்ளி மற்றும் கேத்தாண்டபட்டி கிராமங்கள்.
திருப்பத்தூர் வட்டம் (பகுதி)
கொத்தூர் (ஆர்.எப்), கொத்தூர், சொரைகாயல்நத்தம், நயணசெருவு, தோப்புலகுண்டா, கத்தாரி, ஆத்தூர்குப்பம், குடியன்குப்பம், சின்னமோட்டூர், மண்டலவாடி, ஜோலார்பேட்டை (ஆர்.எப்), மங்கலம் (ஆர்.எப்), மங்கலம் விரிவாக்கம், ஏலகிரி மலை, நாகலத்து (ஆர்.எப்), நாகலத்து (விரிவாக்கம் ஆர்.எப்), பொன்னேரி, ஏலகிரி கிராமம், காட்டேரி, திரியாலம், வேடட்ப்பட்டு, பந்தாரப்பள்ளி, பச்சூர், பையனப்பள்ளி, வெலகல்நத்தம், நந்திபெண்டா (ஆர்.எப்), மண்டலநாயனகுண்டா, கொல்லங்குடை, பனியாண்டபள்ளி, மல்லபள்ளி, அக்ரஹாரம், அம்மனங்கோயில், மூக்கனூர், அச்சமங்கலம், தாமலேரி முத்தூர், பால்னாங்குப்பம், பாச்சல், கதிரிமங்கலம், பெரியகரம், புத்தகரம், சந்திரபுரம், விருபாட்சிபுரம், தோக்கியம், கந்திலி மற்றும் சின்னகந்திலி கிராமங்கள். நாட்ரம்பள்ளி (பேரூராட்சி) மற்றும் ஜோலார்பேட்டை(பேரூராட்சி).
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி