திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 50வது தொகுதியாக திருப்பத்தூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | ஈ. எல். இராகவமுதலி | சுயேச்சை | 20,918 |
1957 | ஆர். சி. சமண்ண கவுண்டர் | இந்தியத் தேசிய காங்கிரசு | 18,618 |
1962 | கே. திருப்பதி கவுண்டர் | திமுக | 32,400 |
1967 | சி. கவுண்டர் | திமுக | 32,589 |
1971 | ஜி. இராமசாமி | திமுக | 37,120 |
1977 | பி. சுந்தரம் | திமுக | 19,855 |
1980 | பி. சுந்தரம் | திமுக | 42,786 |
1984 | ஒய். சண்முகம் | இந்தியத் தேசிய காங்கிரசு | 46,884 |
1989 | பி. சுந்தரம் | திமுக | 40,998 |
1991 | ஏ. கே. சி. சுந்தரவேல் | அதிமுக | 69,402 |
1996 | ஜி. சண்முகம் | திமுக | 66,207 |
2001 | டி. கே. இராசா | பாமக | 59,840 |
2006 | டி. கே. இராசா | பாமக | 71,932 |
2011 | கே. ஜி ரமேஷ் | அதிமுக | 82,095 |
2016 | அ. நல்லதம்பி | திமுக | 80,791 |
2021 | அ. நல்லதம்பி | திமுக | 96,522 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,19,877 | 1,21,635 | 30 | 2,41,542 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருப்பத்தூர் வட்டம் (பகுதி)
தாதவள்ளி, மாடபள்ளி, திருப்பத்தூர், கும்மிடிகான்பேட்டை, பதனவாடி, நரியனேரி, இலக்கிநாயக்கன்பட்டி, காசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்கடாபுரம், கோனேரிகுப்பம், கதிராம்பட்டி, கூடப்பட்டு, புங்கம்பட்டுநாடு, இன்னர் ஜவ்வாது (ஆர், எப்), புதூர் நாடு, மாம்பாக்கம் (ஆர்.எப்), பொம்மிக்குப்பம், மோட்டூர், மட்ரபள்ளி, உதயமுத்தூர், கொரட்டி, இலவம்பட்டி, முலக்காரம்பட்டி, குனிச்சி, சின்னகண்ணாலம்பட்டி, பெரியகண்ணாலம்பட்டி, எர்ரம்பட்டி, அவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி, நத்தம், கருங்கல்பட்டி, நரவிந்தம்பட்டி, சொக்கனன்பட்டி, கெங்கநாயக்கன்பட்டி, காக்கன்கரை, செவ்வாத்தூர், சின்னாரம்பட்டி, பேரம்பட்டு, விஷமங்கலம், குரும்பேரி, சிம்மனபுதூர், நெல்லீவாசல்நாடு, கோவிந்தபுரம் (ஆர்.எப்), சிங்காரபேட்டை (ஆர்.எப்), மற்றும் சிங்காரபேட்டை விரிவாக்கம் (ஆர்.எப்) கிராமங்கள்.
திருப்பத்தூர் (நகராட்சி).