சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 93வது தொகுதியாக சேந்தமங்கலம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1957 டி. சிவஞானம் பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 23,749
1962 வி. ஆர். பெரியண்ணன் திமுக 27,728
1967 எ. எஸ். கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 31,308
1971 சின்ன வெள்ளைய கவுண்டர் திமுக 34,507
1977 வி. சின்னசாமி அதிமுக 28,731
1980 சி. சிவப்பிரகாசம் அதிமுக 37,577
1984 சி. சிவப்பிரகாசம் அதிமுக 54,129
1989 கே. சின்னசாமி அதிமுக 36,489
1991 கே. சின்னசாமி அதிமுக 72,877
1996 சி. சந்திரசேகரன் திமுக 58,673
2001 கே. கலாவதி அதிமுக 61,312
2006 கு. பொன்னுசாமி திமுக 64,506
2011 ஆர். சாந்தி தேமுதிக 76,637
2016 சி. சந்திரசேகரன் அதிமுக 91,339
2021 கு. பொன்னுசாமி திமுக 90,681

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,18,197 1,23,831 26 2,42,054

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

ராசிபுரம் தாலுக்கா (பகுதி)

பச்சுடையாம்பாளையம், ஓ. ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.

சீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)

சேந்தமங்கலம் தாலுக்கா (பகுதி)

கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.

காளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி).

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *