குன்னூர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 116வது தொகுதியாக குன்னூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1957 | ஜே. மாதா கவுடர் | இந்திய தேசிய காங்கிரசு | 22,113 |
| 1962 | ஜே. மாதா கவுடர் | இந்திய தேசிய காங்கிரசு | 36,668 |
| 1967 | பி. கவுடர் | திமுக | 31,855 |
| 1971 | சோ. கருணைநாதன் | திமுக | 33,451 |
| 1977 | கே. அரங்கசாமி | திமுக | 22,649 |
| 1980 | எம். அரங்கநாதன் | திமுக | 34,424 |
| 1984 | எம். சிவக்குமார் | அதிமுக | 47,113 |
| 1989 | என். தங்கவேல் | திமுக | 40,974 |
| 1991 | எம். கருப்புசாமி | அதிமுக | 53,608 |
| 1996 | என். தங்கவேல் | திமுக | 63,919 |
| 2001 | கே. கந்தசாமி | தமாகா | 53,156 |
| 2006 | எ. சவுந்தரபாண்டியன் | திமுக | 45,303 |
| 2011 | கா. இராமச்சந்திரன் | திமுக | 61,302 |
| 2016 | ஏ. ராமு | அதிமுக | 61,650 |
| 2021 | கா. இராமச்சந்திரன் | திமுக | 61,820 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
| வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
| 2022-ன் படி | 90,723 | 99,869 | 4 | 1,90,596 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்.
- கோத்தகிரி வட்டம்
- குன்னார் வட்டம் (பகுதி)
எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள், அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்கடன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி) மற்றும் உலிக்கல் (பேரூராட்சி).
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி