
பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 127வது தொகுதியாக பழனி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | சி. பழனிசாமி | திமுக | 38,919 |
1977 | என். பழனிவேல் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 23,810 |
1980 | என். பழனிவேல் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 41,874 |
1984 | ஏ. எஸ். பொன்னம்மாள் | இந்திய தேசிய காங்கிரசு | 62,344 |
1989 | என். பழனிவேல் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 34,379 |
1991 | ஏ. சுப்புரத்தினம் | அதிமுக | 70,404 |
1996 | டி. பூவேந்தன் | திமுக | 68,246 |
2001 | எம். சின்னசாமி | அதிமுக | 63,611 |
2006 | மா. அன்பழகன் | திமுக | 57,181 |
2011 | கே. எஸ். என். வேணுகோபால் | அதிமுக | 82,051 |
2016 | ஐ. பி. செந்தில்குமார் | திமுக | 1,00,045 |
2021 | ஐ. பி. செந்தில்குமார் | திமுக | 1,08,566 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,34,347 | 1,40,914 | 52 | 2,75,313 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- கொடைக்கானல் வட்டம்
- பழனி வட்டம் (பகுதி)
அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி (வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி (வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு,தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஏ.களையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்கலம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிங்கநாயக்கன்பட்டி,கோதைமங்கலம், பச்சலைநாயக்கன்பட்டி,கோம்பைபட்டி, சிவகிரிபட்டி, தட்டான்குளம் மற்றும் ஓபுளாபுரம் கிராமங்கள்.
பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி), மற்றும் நெய்க்காரப்பட்டி (பேரூராட்சி).
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி