
முசிறி சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 145வது தொகுதியாக முசிறி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | தங்கவேலு | சுயேச்சை | 18,427 |
1957 | வி. எ. முத்தையா | இந்திய தேசிய காங்கிரசு | 34,427 |
1962 | செ. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 32,155 |
1967 | பு. செ. முத்துச்செல்வன் | திமுக | 32,615 |
1971 | பு. செ. முத்துச்செல்வன் | திமுக | 35,091 |
1977 | பி. கோதண்டராமன் என்கிற முசிறி புத்தன் | அதிமுக | 34,569 |
1980 | எம். கே. ராசமாணிக்கம் | அதிமுக | 53,697 |
1984 | செ. இரத்தினவேலு | அதிமுக | 65,759 |
1989 | எம். தங்கவேல் | அதிமுக | 49,275 |
1991 | எம். தங்கவேல் | அதிமுக | 70,812 |
1996 | எம். என். ஜோதி கண்ணன் | திமுக | 67,319 |
2001 | சி. மல்லிகா | அதிமுக | 47,946 |
2006 | என். செல்வராசு | திமுக | 74,311 |
2011 | என். ஆர். சிவபதி | அதிமுக | 82,631 |
2016 | எம். செல்வராசு | அதிமுக | 89,398 |
2021 | ந. தியாகராஜன் | திமுக | 90,624 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,10,158 | 1,15,932 | 22 | 2,26,112 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- தொட்டியம் வட்டம்
- முசிறி வட்டம் (பகுதி)
பிள்ளபாளையம், கரிகாலி, வடமலைப்பட்டி, கார்குடி, ஊரக்கரை, மகாதேவி, ஜம்புமடை, வாளசிராமணி, அஞ்சலம், கோணப்பம்பட்டி, தேவனூர், ஆராய்ச்சி, வலையெடுப்பு, பைத்தம்பாறை, சேர்குடி, பூலாஞ்சேரி, சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, தும்பலம், சிட்டிலரை, முத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி (மேற்கு), எம்.புதுப்பட்டி (கிழக்கு), காமாட்சிப்பட்டி, டி.புத்தூர், மூவேலி, செவந்திலிங்கபுரம், உமையாள்புரம் மற்றும் வெள்ளூர் கிராமங்கள்.
மோருபட்டி(பேரூராட்சி), தாத்தையங்கார்பேட்டை (பேரூராட்சி) மற்றும் முசிறி (பேரூராட்சி).