
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 153வது தொகுதியாக நெய்வேலி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன் | அதிமுக | 69,549 |
2016 | சபா ராஜேந்திரன் | திமுக | 54,299 |
2021 | சபா ராஜேந்திரன் | திமுக | 75,177 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,07,583 | 1,07,689 | 15 | 2,15,287 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பண்ரூட்டி வட்டம் (பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாமூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர் (மேற்கு), கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், நெய்வேலி (டவுன்ஷிப்).