
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 156வது தொகுதியாக குறிஞ்சிப்பாடி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1962 | என். ராஜாங்கம் | திமுக | 32,046 |
1967 | என். ராஜாங்கம் | திமுக | 25,478 |
1971 | என். ராஜாங்கம் | திமுக | 27,465 |
1977 | எம். செல்வராஜ் | திமுக | 19,523 |
1980 | ஏ. தங்கராசு | அதிமுக | 38,349 |
1984 | ஏ. தங்கராசு | அதிமுக | 45,400 |
1989 | என். கணேசமூர்த்தி | திமுக | 44,887 |
1991 | கே. சிவசுப்ரமணியன் | அதிமுக | 51,313 |
1996 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 67,152 |
2001 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 65,425 |
2006 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 56,462 |
2011 | ஆர். ராஜேந்திரன் | அதிமுக | 88,345 |
2016 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 82,864 |
2021 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 1,00,688 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,19,975 | 1,23,848 | 28 | 2,43,851 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கடலூர் வட்டம் (பகுதி)
குணமங்கலம். பில்லாலி, திருவந்திபுரம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், குமாரப்பேட்டை, ஓட்டேரி, திருமாணிக்குழி, வானமாதேவி, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சென்னப்பநாயக்கன்பாளையம், வெள்ளகரை, ராமாபுரம், மாவடிபாளையம். கரையேறவிட்டகுப்பம், வெட்டுக்குளம், பொன்னையன்குப்பம், பச்சையாங்குப்பம், குடிகாடு, காரைக்காடு, அன்னவல்லி, கெங்கமநாயகன்குப்பம், வழுதலம்பட்டு, தொண்டமாநத்தம், சேடப்பாளையம், தியாகவல்லி, செம்மங்குப்பம், கோதண்டராமாபுரம், அம்பலவாணன்பேட்டை, தோப்புக்கொல்லை, திம்மராவுத்தன்குப்பம், கிருஷ்ணன்குப்பம், தம்பிபாளையம், ஆயீக்குப்பம், அகரம், தங்களிக்குப்பம், அனுக்கம்பட்டு, திருச்சேபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, ஆலப்பாக்கம், பூவானிக்குப்பம், இடங்கொண்டாம்பட்டு, அக்கத்திம்மாபுரம், ரங்கநாதபுரம், கேசவநாராயணபுரம், தம்பிபேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கஞ்சமாண்டான்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், தானூர், ஆண்டார்முள்ளிபள்ளம். சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, கண்ணாடி, ஆடூர்குப்பம், விருப்பாக்சி, ராசாகுப்பம், கருங்குழி, கொளக்குடி, நையின்னக்குப்பம், மருவாய், அரங்கமங்களம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி மற்றும் குண்டியமல்லூர் கிராமங்கள்.
வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி.