
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 163வது தொகுதியாக நாகப்பட்டினம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 31,519 |
1980 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 44,105 |
1984 | கோ. வீரையன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43,684 |
1989 | கோ. வீரையன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 44,681 |
1991 | கோடிமாரி | அதிமுக | 53,050 |
1996 | ஜி.நிஜாமுதீன் | இ.தே.லீக்/திமுக | 46,533 |
2001 | ஜீவானந்தம் | அதிமுக | 59,808 |
2006 | கோ. மாரிமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 57,315 |
2011 | கே. ஏ. ஜெயபால் | அதிமுக | 61,870 |
2016 | எம். தமீமுன் அன்சாரி | ம.ஜ.க | 64,903 |
2021 | ஆளூர் ஷா நவாஸ் | வி.சி.க | 66,281 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 91,673 | 97,510 | 20 | 1,89,203 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
நாகப்பட்டினம் வட்டம் (பகுதி)
கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள்,
திட்டச்சேரி (பேரூராட்சி) மற்றும் நாகப்பட்டினம் (நகராட்சி).