
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 164வது தொகுதியாக கீழ்வேளூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | பெ. மகாலிங்கம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 59,402 |
2016 | உ. மதிவாணன் | திமுக | 61,999 |
2021 | வி. பி. நாகை மாலி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 67,988 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 84,900 | 88,671 | 2 | 1,73,573 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- கீழ்வேளூர் தாலுக்கா
- நாகப்பட்டினம் தாலுக்கா (பகுதி)
ஆபரணதாரி, பாப்பாகோவில், வடக்குபொய்கைநல்லூர், கருவேலங்கடை, ஒரத்தூர், அகர ஒரத்தூர், புதுச்சேரி, ஆலங்குடி, வடுகச்சேரி, மகாதானம், வடவூர், தெற்கு பொய்கைநல்லூர், குறிச்சி, அகலங்கன் மற்றும் செம்பியன்மகாதேவி கிராமங்கள், திருக்குவளை தாலுக்கா (பகுதி) தென்மருதூர், ஆதமங்கலன், அணக்குடி, வடக்குபனையூர், தெற்குபனையூர், வலிவலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, கார்குடி, திருக்குவளை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனமநல்லூர், வாழக்கரை, ஈசனூர், திருவாய்மூர், எட்டுகுடி, வல்லம், கீரம்பேர், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூர் மற்றும் சிதைமுர் கிராமங்கள்.