கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 171வது தொகுதியாக கும்பகோணம் தொகுதி உள்ளது. இத் தொகுதி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 வரதன் இந்திய தேசிய காங்கிரசு
1957 டி. சம்பத் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஏ. ஆர். இராமசாமி இந்திய தேசிய காங்கிரசு 32,397
1967 நா. காசிராமன் இந்திய தேசிய காங்கிரசு
1971 நா. காசிராமன் நிறுவன காங்கிரசு
1977 எசு. ஆர். இராதா அதிமுக 26,432
1980 இ. எசு. எம். பக்கீர்முகம்மது இந்திய தேசிய காங்கிரசு 45,038
1984 கே. கிருஷ்ணமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு 58,334
1989 கோ. சி. மணி திமுக 36,763
1991 இராம. இராமநாதன் அதிமுக 67,271
1996 கோ. சி. மணி திமுக 69,849
2001 கோ. சி. மணி திமுக 60,515
2006 கோ. சி. மணி திமுக 65,305
2011 சாக்கோட்டை க. அன்பழகன் திமுக 78,642
2016 சாக்கோட்டை க. அன்பழகன் திமுக 85,048
2021 சாக்கோட்டை க. அன்பழகன் திமுக 96,057

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கும்பகோணம் வட்டம் (பகுதி)

அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையாளூர்பெரும, தில்லையாம்பூர், திப்பிராசபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள்.

கும்பகோணம் மாநகராட்சி சோழபுரம் (பேரூராட்சி) திருநாகேசுவரம் (பேரூராட்சி).

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *