
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 183வது தொகுதியாக அறந்தாங்கி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | முஹம்மது சாலிகு மரைக்காயர் | இந்திய தேசிய காங்கிரசு | 19,064 |
1957 | எசு. இராமசாமி தேவர் | சுயேச்சை | 17,637 |
1962 | எ. துரையரசன் | திமுக | 33,781 |
1967 | எ. துரையரசன் | திமுக | 42,943 |
1971 | எசு. இராமநாதன் | திமுக | 49,322 |
1977 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 35,468 |
1980 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 50,792 |
1984 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 70,101 |
1989 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 61,730 |
1991 | சு. திருநாவுக்கரசர் | தாயக மறுமலர்ச்சி கழகம் | 73,571 |
1996 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 70,260 |
2001 | பி. அரசன் எம். ஜி. ஆர் | அதிமுக | 58,499 |
2006 | உதயன் சண்முகம் | திமுக | 63,333 |
2011 | எம். இராஜநாயகம் | அதிமுக | 67,559 |
2016 | ஏ. இரத்தினசபாபதி | அதிமுக | 69,905 |
2021 | தி. இராமச்சந்திரன் | இந்திய தேசிய காங்கிரசு | 60,256 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,15,991 | 1,18,277 | 5 | 2,34,273 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- மணமேல்குடி வட்டம்
- ஆவுடையார்கோயில் வட்டம், சித்திரம்பூர்
- அறந்தாங்கி வட்டம் (பகுதி)
ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்யைல், மேலப்பட்டு, பள்ளித்திவயல், ஊர்வணி, ஆலங்க்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான்வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்ட்கவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, கனக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளுர், ஆடலைக்காலபைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம், திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல், பங்கயத்தான்குடி, வெள்ளாட்டுமங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள்.
அறந்தாங்கி (நகராட்சி).