மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 189வது தொகுதியாக மதுரை கிழக்கு தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 இந்திய தேசிய காங்கிரசு டி. கே. இராமா
1957 இந்திய தேசிய காங்கிரசு திருமதி பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்
1962 இந்திய தேசிய காங்கிரசு திருமதி பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்
1967 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. பி. ஜானகி அம்மாள்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 கே. எஸ். ராமகிருஷ்ணன் திமுக
1977 என். சங்கரய்யா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 24,263
1980 என். சங்கரய்யா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36,862
1984 கா. காளிமுத்து அதிமுக 43,210
1989 எஸ். ஆர். இராதா அதிமுக 40,519
1991 ஓ. எஸ். அமர்நாத் அதிமுக 50,336
1996 வி. வேலுசாமி திமுக 39,478
2001 என். நன்மாறன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 32,461

 

2006 என். நன்மாறன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36,383
2011 தமிழரசன் அதிமுக 99,447
2016 பெ. மூர்த்தி திமுக 1,08,569
2021 பெ. மூர்த்தி திமுக 1,22,729

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,59,089 1,64,871 62 3,24,022

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி)

கடவூர், நாயக்கன்பட்டி, பொய்யக்கரைபட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, மலைப்பட்டி, பூலாம்பட்டி, வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, கள்ளந்திரி, மாங்குளம், மீனாட்சிபுரம், சவலக்கரையான், வெள்ளியங்குன்றம், அப்பன்திருப்பதி, அண்டமான், மாத்தூர், பில்லுசேரி, பொரிசுபட்டி, செட்டிகுளம், பெரியபட்டி, காவனூர், தெற்குபெத்தாம்பட்டி, குலமங்கலம், கருவனூர், மந்திகுளம், பாறைப்பட்டி, கொல்லங்குளம், குருத்தூர், ஜோதியாபட்டி, எருக்கலைநத்தம், உசிலம்பட்டி, கொடிமங்கலம், கூளப்பாண்டி, வீரபாண்டி, வடுகபட்டி, பூதகுடி, வேப்பங்குளம், செட்டிகுளம், மாரணவாரியேந்தல், இலுப்பக்குடி, துய்யநேரி, அரும்பனூர், அயிலாங்குடி, இரணியம், கன்னிகுடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், வாகைக்குளம், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, திருப்பாலை, காதக்கிணறு, புதுப்பட்டி, சேம்பியனேந்தல், கொடிக்குளம், தாமரைப்பட்டி, பூலாம்பட்டி, வலச்சிகுளம், திருக்காணை, பேராக்கூர், பொடசபட்டி, நரசிங்கம், மங்களக்குடி, உத்தங்குடி, உலகனேரி, திருமோகூர், இலங்கியேந்தல், சித்தாக்கூர்,பனைக்குளம், எஸ்.நெடுங்குளம், வெள்ளைகுப்பம், வரகனேரி,நாட்டார்மங்கலம், ராஜாக்கூர், முண்டநாயகம், மயிலங்குண்டு, திண்டியூர், தாத்தான்குளம்,காளிகாப்பான்,பாண்டியன்கோட்டை, பூலாங்குளம், காத்தவனேந்தல், வீரபாஞ்சான், விளத்தூர், வெள்ளாங்குளம், இடையபட்டி, இசலானி, தச்சனேந்தல், கருப்புக்கால், வரிச்சியூர், சீகன்குளம், ஆண்டார்கொட்டாரம், இளமனூர், பொட்டப்பனையூர், வெல்லக்குண்டு, பறையன்குளம், ஆளவந்தான், குன்னத்தூர், கோழிக்குடி, கொண்டபெத்தான் கருப்பிள்ளையேந்தல், சக்கிமங்கலம், உடன்குண்டு ஓவலூர், செங்கோட்டை, களிமங்கலம், கார்சேரி, சக்குடி, அனஞ்சியூர், கள்வேலிபட்டி மற்றும் அங்காடிமங்கலம் கிராமங்கள்.

ஆணையூர் (பேரூராட்சி), கண்ணனேந்தல் (சென்சஸ் டவுன்), நாகனாகுளம் (சென்சஸ் டவுன்), ஒத்தக்கடை (சென்சஸ் டவுன்) மற்றும் வண்டியூர் (சென்சஸ் டவுன்).

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *