இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 211வது தொகுதியாக இராமநாதபுரம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1948

(இடைத் தேர்தல்)

அப்துல் காதர் ஜமாலி சாகிப் மு.லீக்
1952 சண்முக ராஜேஸ்வர சேதுபதி இந்திய தேசிய காங்கிரசு
1957 சண்முக ராஜேஸ்வர சேதுபதி சுயேட்சை
1962 சண்முக ராஜேஸ்வர சேதுபதி இந்திய தேசிய காங்கிரசு
1967 டி. தங்கப்பன் திமுக
1971 எம். எஸ். கே. சத்தியேந்திரன் திமுக
1977 த. இராமசாமி அதிமுக 33,048
1980 த. இராமசாமி அதிமுக 46,987
1984 த. இராமசாமி அதிமுக 56,342
1989 எம். எஸ். கே. ராஜேந்திரன் திமுக 38,747
1991 எம். தென்னவன் அதிமுக 62,004
1996 அ. இரகுமான்கான் திமுக 59,794
2001 அன்வர் ராஜா அதிமுக 59,824
2006 ஹசன் அலி இந்திய தேசிய காங்கிரசு 66,922
2011 ஜவாஹிருல்லா மமக 65,831
2016 செ. மு. மணிகண்டன் அதிமுக 89,365
2021 காதர்பாட்சா முத்துராமலிங்கம் திமுக 1,11,082

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,52,071 1,54,968 14 3,07,053

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

இராமநாதபுரம் வட்டம் (பகுதி)

ஆற்றங்கரை பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, இராஜசூரியமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி,திருப்பாலைகுடி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டிணம், மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கானேரி, புல்லந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள்.

கீழக்கரை (நகராட்சி), இராமநாதபுரம் (நகராட்சி), இராமேஸ்வரம் (நகராட்சி) மற்றும் மண்டபம் (பேரூராட்சி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *