
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 219வது தொகுதியாக சங்கரன்கோவில் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | இராமசுந்தர கருணாலய பாண்டியன்
ஊர்காவலன் |
சுயேட்சை/ இந்திய தேசிய காங்கிரசு | – |
1957 | ஏ. ஆர். சுப்பையா முதலியார்
ஊர்காவலன் |
இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | எஸ். எம். அப்துல் மஜீத் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | பி. துரைராஜ் | திமுக | – |
1971 | ச. சுப்பையா | திமுக | – |
1977 | ச. சுப்பையா | திமுக | – |
1980 | பி. துரைராஜ் | அதிமுக | – |
1984 | எஸ். சங்கரலிங்கம் | அதிமுக | – |
1989 | ச. தங்கவேலு | திமுக | – |
1991 | வி. கோபால கிருஷ்ணன் | அதிமுக | – |
1996 | சொ. கருப்பசாமி | அதிமுக | – |
2001 | சொ. கருப்பசாமி | அதிமுக | |
2006 | சொ. கருப்பசாமி | அதிமுக | |
2011 | சொ. கருப்பசாமி | அதிமுக | 72,297 |
2012
(இடைத்தேர்தல்) |
எஸ். முத்துசெல்வி | அதிமுக | – |
2016 | மு. ராஜலட்சுமி | அதிமுக | 78,751 |
2021 | ஈ. இராஜா | திமுக | 71,347 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,17,799 | 1,24,478 | 7 | 2,42,284 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)
கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூட்டுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பாறை, சங்குபட்டி, வெள்ளக்குளம், ஏ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, கரிசத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பாகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, மதுராபுரி, குருவிகுளம் (வடக்கு), குறிஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டக்குறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், இசட்.தேவர்குளம், அத்திப்பட்டி, ராமலிங்கபுரம், குருவிகுளம் (தெற்கு), வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைக்குளம், உசிலாங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பலங்குளம், நலந்துலா, க.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கல்பட்டி, சின்னகோவிலங்குளம், நடுவக்குறிச்சி (சிறு), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டடைகட்டி, குலசேகரமங்கலம், சேந்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சந்தா, வடக்கு பனவடலி, நரிக்குடி, அச்சம்பட்டி, வெள்ளப்பனேரி, தாடியம்பட்டி, மூவிருந்தாளி, வன்னிகோனேந்தல், தேவர்குளம், சுண்டங்குறிச்சி மற்றும் மேல இலந்தைக்குளம் கிராமங்கள்.
திருவேங்கடம் (பேரூராட்சி) மற்றும் சங்கரன்கோவில் (நகராட்சி).
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி