
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 221வது தொகுதியாக கடையநல்லூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | ஏ. ஆர். சுப்பையா முதலியார் | சுயேட்சை | – |
1971 | ஏ. ஆர். சுப்பையா முதலியார் | திமுக | – |
1977 | எம். எம். ஏ. ரசாக் | அதிமுக | 29,347 |
1980 | சாகுல் ஹமீத் | சுயேச்சை | 38,225 |
1984 | டி. பெருமாள் | அதிமுக | 49,186 |
1989 | சம்சுதீன் (எ) கதிரவன் | திமுக | 37,531 |
1991 | எஸ். நாகூர் மீரான் | அதிமுக | 55,681 |
1996 | நைனா முஹம்மது | திமுக | 49,641 |
2001 | எம். சுப்பையா பாண்டியன் | அதிமுக | 48,220 |
2006 | எஸ். பீட்டர் அல்போன்ஸ் | இந்திய தேசிய காங்கிரசு | 53,700 |
2011 | பூ. செந்தூர் பாண்டியன் | அதிமுக | 80,794 |
2016 | கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் | இஒமுலீ | 70,763 |
2021 | செ. கிருஷ்ணமுரளி | அதிமுக | 88,474 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,40,768 | 1,43,279 | 12 | 2,84,059 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- செங்கோட்டை வட்டம்
- கடையநல்லூர் தாலுக்கா (பகுதி)
பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், பால மார்த்தாண்டபுரம், காசிதர்மம், வேலாயுதபுரம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்.
கடையநல்லூர் (நகராட்சி), புதூர் (செ) (பேரூராட்சி), சாம்பவர் வடகரை (பேரூராட்சி), ஆயிக்குடி (பேரூராட்சி),அச்சன்புதூர் (பேரூராட்சி) மற்றும் பண்பொழி (பேரூராட்சி).