
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 225வது தொகுதியாக அம்பாசமுத்திரம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம் | மார்க்சிய கம்யூனிசக் கட்சி | 23,356 |
1980 | ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம் | மார்க்சிய கம்யூனிசக் கட்சி | 31,262 |
1984 | பாலசுப்பிரமணியன் | அதிமுக | 44,707 |
1989 | கே. இரவி அருணன் | இந்திய தேசிய காங்கிரசு | 31,337 |
1991 | ஆர். முருகையா பாண்டியன் | அதிமுக | 57,433 |
1996 | இரா. ஆவுடையப்பன் | திமுக | 46,116 |
2001 | எம். சக்திவேல் முருகன் | அதிமுக | 43,021 |
2006 | இரா. ஆவுடையப்பன் | திமுக | 49,345 |
2011 | இசக்கி சுப்பையா | அதிமுக | 80,156 |
2016 | ஆர். முருகையா பாண்டியன் | அதிமுக | 78,555 |
2021 | இசக்கி சுப்பையா | அதிமுக | 85,211 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,18,854 | 1,26,203 | 7 | 2,45,064 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அம்பாசமுத்திரம் வட்டம் (பகுதி)
தெற்கு அரியநாயகிபுரம், உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், தென் திருப்புவனம், மனப்பாரநல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடை மருதூர், அத்தாளநல்லூர், சாட்டுப்பத்து, அயன் திருவாலீஸ்வரம், மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், அடையக் கருங்குளம், ஏகாம்பரம், கோடாரங்குளம், வெள்ளங்குளி, வடக்கு காருகுறிச்சி, கூனியூர், புதுக்குடி, தெற்கு வீரவநல்லூர், தெற்கு கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பான்குளம், அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி வனம், மலையான்குளம், திருவிருத்தான்புள்ளி, பூங்குடையார்குளம், கரிசல்பட்டி, உலகன்குளம், வெங்கட்ரெங்கபுரம் மற்றும் பாபநாசம் (ஆர்.எப்.) கிராமங்கள்.
அம்பாசமுத்திரம் (பேரூராட்சி), விக்கிரமசிங்கபுரம் (பேரூராட்சி), சிவந்திபுரம் (சென்சஸ் டவுன்), கல்லிடைக்குறிச்சி (பேரூராட்சி), வீரவநல்லூர் (பேரூராட்சி), சேரன்மகாதேவி (பேரூராட்சி) பத்தமடை (பேரூராட்சி), மேலச்செவல் (பேரூராட்சி), கோபாலசமுத்திரம் (பேரூராட்சி) மற்றும் மணிமுத்தாறு (பேரூராட்சி).
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி