
நிறைமதி முகமெனு – மொளியாலே
நெறிவிழி கணையெனு – நிகராலே
உறவுகொள் மடவர்க – ளுறவாமோ
உனதிரு வடியினி – யருள்வாயே
மறைபயி லரிதிரு – மருகோனே
மருவல ரசுரர்கள் – குலகாலா
குறமகள் தனைமண – மருள்வோனே
குருமலை மருவிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பரவரிதாகி (சுவாமிமலை) – திருப்புகழ் 226