பலகாதல் பெற்றிட (சுவாமிமலை) – திருப்புகழ் 227

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
பலனேபெ றப்பரவு – கயவாலே

பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
பதறாமல் வெட்கமறு – வகைகூறி

விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
வினையேமி குத்தவர்கள் – தொழிலாலே

விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
விலைமாதர் பொய்க்கலவி – யினிதாமோ

மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்
வடமேரெ னத்தரையில் – விழவேதான்

வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
மருகாக டப்பமல – ரணிமார்பா

சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
செவியார வைத்தருளு – முருகோனே

சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
திருவேர கத்தில்வரு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பாதி மதிநதி (சுவாமிமலை) – திருப்புகழ் 228

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *