
வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
னீடு மெய்த்து யர்ந்து – வயதாகி
வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
மார்க ளுக்கி சைந்து – பொருள்தேடி
ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
மாப ணிக்கள் விந்தை – யதுவான
ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
டாவி மெத்த நொந்து – திரிவேனோ
சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
சூழ்சு ரர்க்க ணன்பு – செயும்வீரா
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
சூத னுக்கி சைந்த – மருகோனே
ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
தானி றைக்க வந்த – தொருசாலி
யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
மேர கத்த மர்ந்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : வார்குழலை (சுவாமிமலை) – திருப்புகழ் 234