
விடமும்வடி வேலு மதனச ரங்களும்
வடுவுநிக ரான மகரநெ டுங்குழை
விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு – கதுதோயும்
ம்ருகமதப டீர பரிமள குங்கும
மணியுமிள நீரும் வடகுல குன்றமும்
வெருவுவன பார புளகத னங்களும் – வெகுகாம
நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
மலர்சொருகு கேச பரமுமி லங்கிய
நளினமலர் சோதி மதிமுக விம்பமும் – அனநேராம்
நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு
முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ
னகையுமுள மாதர் கலவியி னைந்துரு – கிடலாமோ
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட – லவையேழும்
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
வகையிரவி போலு மணியும லங்க்ருத
மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு – பதுதோளும்
அடைவலமு மாள விடுசர அம்புடை
தசரதகு மார ரகுகுல புங்கவன்
அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய – மயிலேறி
அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
அழகியசு வாமி மலையில மர்ந்தருள் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : விரித்த பைங்குழல் (சுவாமிமலை) – திருப்புகழ் 237