விரித்த பைங்குழல் (சுவாமிமலை) – திருப்புகழ் 237 

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன
தனத்த னந்தன தனதன வெனவொலி
விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு – மலைபாய

மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ
டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி
வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் – வரிபோதத்

தரித்த தந்திரி மறிபுய மிசைபல
பணிக்கி லங்கிய பரிமள குவடிணை
தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை – படுசேலை

தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர
பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ – தொழியாதோ

உரித்த வெங்கய மறியொடு புலிகலை
தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர – முருகோனே

உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்
குவட்டை யும்பொடி படசத முடிவுற
வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற – விடும்வேலா

வரித்த ரந்துள வணிதிரு மருவிய
வுரத்த பங்கயர் மரகத மழகிய
வணத்த ரம்பர முறவிடு கணையினர் – மருகோனே

வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு
குறத்தி மென்புன மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலை தனிலமர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : விழியால் மருட்டி (சுவாமிமலை) – திருப்புகழ் 238 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *