அரகர சிவன் அரி (திருத்தணிகை) – திருப்புகழ் 240

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண – பவனேயென்

றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு – மதிவீரா

பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் – முருகேசா

பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி – களிகூர

உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர – வுயர்வாய

உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர – முநிவோரும்

பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி – லுறைவோனே

பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அருக்கி மெத்தென (திருத்தணிகை) – திருப்புகழ் 241 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *