/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ கலை மடவார்தம் (திருத்தணிகை) - திருப்புகழ் 256 

கலை மடவார்தம் (திருத்தணிகை) – திருப்புகழ் 256 

கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் – கரைமேலே

கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் – சிலையாலுங்

கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் – றழியாதே

குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் – தருள்வாயே

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் – தொழும்வேலா

தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் – திருமார்பா

தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் – கதிர்வேலா

தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கவடுற்ற சித்தர் (திருத்தணிகை) – திருப்புகழ் 257 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *