/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ கவடுற்ற சித்தர் (திருத்தணிகை) - திருப்புகழ் 257

கவடுற்ற சித்தர் (திருத்தணிகை) – திருப்புகழ் 257 

கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் – பலவாகக்

கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத் – துழல்வானேன்

சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப் – பொருள்தேடி

சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
சரணப்ர சித்திசற் – றுணராரோ

குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக் – ரமசூரன்

குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
துதிரத்தி னிற்குளித் – தெழும்வேலா

சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற் – பவள்நாணத்

தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
சுருதித்த மிழ்க்கவிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கனத்த அற (திருத்தணிகை) – திருப்புகழ் 258 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *