/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ கனத்த அற (திருத்தணிகை) - திருப்புகழ் 258

கனத்த அற (திருத்தணிகை) – திருப்புகழ் 258 

கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக் – குழலார்தங்

கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற் – கறியாதே

இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத் – தசைதோலால்

எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
தெனக்குநித் தமுத்தியைத் – தரவேணும்

பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப் – பொரும்வேலா

பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக் – குமரேசா

தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத் – தணைவோனே

திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கனைத்து அதிர்க்கும் (திருத்தணிகை) – திருப்புகழ் 259 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *