குயில் ஒன்று (திருத்தணிகை) – திருப்புகழ் 262 

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க் – கணையாலே

குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத் – தனலாலே

புயல்வந் தெறியக் கடனின் றலறப்
பொருமங் கையருக் – கலராலே

புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தணையக் – கிடையாதோ

சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப் – பொரும்வீரா

தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
தனமொன் றுமணித் – திருமார்பா

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப் – பதிவாழ்வே

பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : குருவி என (திருத்தணிகை) – திருப்புகழ் 263

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *